நயினார்கோவில் பி.டி.ஓ., வை கண்டித்து உண்ணாவிரதம் ஊராட்சி மன்ற தலைவர்கள் அறிவிப்பு.

நயினார்கோவில் ஊராட்சி ஒன்றிய பி டி ஓ.,வை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பரமக்குடி தாலுகா நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி மன்றத்தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் தலைவர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
துணைத்தலைவர் சசிகலா,
செயலாளர் நாகநாதன் முன்னிலை
வகித்தார். பொருளாளர் முகம்மதுஹக்கீம் வரவேற்றார்.
அப்போது, நயினார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட 37 ஊராட்சிகளில்
நடந்து வரும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும்
அனைத்து பணிகளையும் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் செயல்படுத்த
வேண்டும். ஆனால், இதற்கு மாறாக வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ.)
சேவுகப்பெருமாள் தன்னிச்சையாக செயல்பட்டு, ஊராட்சி தலைவர்கள்,
செயலாளர்களிடம்  வேலை உத்தரவு மதிப்பீட்டை வழங்காமல்,
கமிஷன் பெற்றுக்கொண்டு தனிநபரிடம் கொடுத்துள்ளார். பஞ்சாயத்துராஜ்
சட்டத்தை தவறாக பயன்படுத்தி வருகிறார்.ஆகையால், பி.டி.ஓ.,
சேவுகப்பெருமாளை கண்டித்து , ஜூலை 22 அன்று
11:00 மணி தொடங்கி அலுவலகம் முன்பு தொடர் உண்ணாவிரதம் இருப்பது
என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இணைச் செயலாளர் சத்தியா நன்றி கூறினார் ….
செள.திலிப்
––––

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed