ராமநாதபுரத்தில் இளைஞர் கொலை 4 பேர் கைது.

இராமநாதபுரம், வசந்த நகர் பகுதியில் சில இளைஞர்கள் சேர்ந்து அருண் பிரகாஷ் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரை கத்தியால் குத்தியதில், அருண் பிரகாஷ் என்பவர் உயிர் இழந்தார். மேலும், காயம்பட்ட யோகேஸ்வரன் என்பவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக, கேணிக்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை சம்பந்தமாக முகமது ரியாஸ்,காமாட்சி, சுரேஷ் மற்றும் சாகுல் ஹமீது ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான லெஃப்ட் சேக் (எ) சேக், அப்துல் ரகுமான் மற்றும் சரவணன் ஆகியோரை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் நேரடி மேற்பார்வையில், மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *