செல்போன் பறிக்க முயன்ற நபர்கள்….. வெளுத்து வாங்கிய 15 வயது பெண்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் பகுதியை சேர்ந்தவர் குசும் குமாரி. 15 வயதுடைய இந்த பெண், கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று தீன் தயால் உபாத்யா நகர் வழியே நடந்து சென்றுள்ளார்.அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அப்பெண்ணின் செல்போனை பறிக்க முயற்சி செய்துள்ளனர். இருப்பினும், அச்சமடையாத அப்பெண், 2 பேரில் ஒருவருடன் வீரமாக சண்டை போட்டுள்ளார்.இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர், அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம், அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.இந்த வீடியோவை பார்த்த பலர், அப்பெண்ணின் வீரத்தை புகழ்ந்ததோடு, எல்லா பெண்களும் இப்படி தான் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *