சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் ஊடுருவிய சிங்களர் கைது;உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை.

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் தமிழகத்துக்குள் இலங்கையை சேர்ந்தவர்கள் ஊடுருவாக ராமேஸ்வரம் மெரைன் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து தனுஸ்கோடி கடற்கரை ஓரத்தில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது கம்பிபாடு கடற்கரையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்.

இலங்கை மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பிரதீப் குமார் பண்டாரநாயக்க (30) என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.மேலும் பிடிப்பட்டவர் சிங்களம் பேசுவதால் இவர் குறித்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *