மானாவாரியில் சாகுபடி தொழில்நுட்பம் மூலம் மகசூல் அதிகரிக்கும்    பரமக்குடி விதை பரிசோதனை அலுவலர் தகவல்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய குறுகியகால மானாவாரி எள் சாகுபடிக்கு, ,தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன்  மூலமாக மகசூலை அதிகரிக்க முடியும் என.பரமக்குடி   விதை பரிசோதனை அலுவலர் (பொ) சிங்கார லீனா தகவல் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில்  எள் பயிரானது, கார்த்திகைப் பட்டம் மாசிப் பட்டம் என இரண்டு பட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. மானாவாரியாக அதிகமான பரப்பளவில் எள் சாகுபடி செய்யப்படுவதால் உற்பத்தியையும் உற்பத்தித் திறனும் குறைவாக உள்ளது. இதனை சரிசெய்ய புதிய தொழில்நுட்பங்களை கையாள வேண்டும் .மானாவாரியில் எள் சாகுபடி வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய குறுகிய கால இரகங்களான, டி எம்.வி.3 ,4,5,6, டிஎம்வி(எஸ், வி )7, வி,ஆர்,ஐ(எஸ்வி)1,கோ 1 இரகங்களை பயிரிடலாம். தேர்வு செய்யப்படும் எள் இரகங்களுக்கு இனத்தூய்மை இன்றியமையாதது.
இனத்தூய்மை இல்லாமல் பயிரிடும் பொழுது பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் அதிகமாகி பயிர் பாதிக்கப்படுகின்றன.இதை தடுக்க  ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டசித்தை விதையுடன் கலந்து பாலித்தீன் பையில் போட்டு 24 மணி நேரம் வைத்து ,பின்னர், பாக்கெட்டில் அசோஸ்பைரில்லம் என்னும் நுண்ணுயிர் கலவையை 200 மில்லி ஆறிய வாடிகஞ்சியுடன் கலந்து  30 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்கவும்.
பொதுப் பரிந்துரைப்படி ஹெக்டேருக்கு 23 கிலோ தழைச்சத்து, 13 கிலோ மணிச்சத்து ,13 கிலோ சாம்பல்சத்து வீதம் அடியுரமாக முழு அளவையும் விதைக்கும் முன் தூவவேண்டும்.இதுதவிர, நிலத்தின் தன்மைக்கு ஏற்ப 5 கிலோ மாங்கனீஸ் சல்பேட் 15 கிலோ மணலுடன் கலந்து தூவ  வேண்டும். இதனால் காய்கள் ஒரே சமயத்தில் திரட்சியாக முதிர்வதற்கு வழி செய்கிறது.
விதைத்த மூன்றாம் நாள்  அலக்குளர் என்ற களைக்கொல்லியை ஒரு எக்டேருக்கு 20 கிலோ என்ற அளவில் மணல் கலந்து தூவினால் சாரணை போன்ற களைகளை கட்டுப்படுத்தலாம். விதைத்த 15 மற்றும் 35 ஆம் நாள் இரண்டு தடவை களை எடுக்க வேண்டும்.
மானாவாரியில் சாகுபடியில் விதைத்த 25 ஆம் நாளிலிருந்து கொண்டைப்புழு தாக்குதலால்,செடியின் நுனிப்பகுதியில் உள்ள இலைகள் சேர்த்து வலை போல பின்னிக் கொள்ளும்,  இதனால், இளம் மொட்டுகளும் , பூக்களும் சேதமடைகின்றன. இதை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 400 கிராம் கார்பரிலை  200 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த 25, 35 மற்றும் 50ஆம் நாளில் தாக்குதலை கணக்கிட்டு தெளிக்கவேண்டும். பூவிதழ் நோய் தென்பட்டால் நோயை பரப்பும் இலைத்தத்துப் பூச்சியை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 200 மில்லி மிதைல்டெமடான்  அல்லது 800 குயினால்பாஸ் மருந்து தெளிக்கவும். இவ்வாறாக மானாவாரிக்கு ஏற்ற இனத்தூய்மை பெற்ற விதைகளை பயிரிட வேண்டும். மேலும் உரிய உரை முறையில் உரமிட்டு தேவையான பயிர் பாதுகாப்பு செய்தால் காலத்தில் அறுவடை செய்து நல்ல விளைச்சலை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார் .
உடன் பரமக்குடி வேளாண்மை அலுவலர்கள் ஜெயந்திமாலா மற்றும் முருகேஸ்வரி இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *